பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயற்சி


பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயற்சி
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயற்சி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பேரூரட்சி 2-வது வார்டு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வினியோகம் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றனர். அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ெசய்தனர்.

குடிநீரில் கழிவுநீர் கலப்பு

சாத்தான்குளம் பேரூராட்சி 2-வது வார்டு அண்ணாநகர் தெரு, வடக்கு மாட வீதி, பங்களா தெரு, வடக்கு ரத வீதி உள்ளிட்ட தெருக்களில் கடந்த ஒரு மாதமாக குடிநீரோடு கழிவு நீரும் கலந்து வந்துள்ளது. இதுகுறித்து கடந்த வாரம் வார்டு மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்ததுடன், குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டறிந்து சீரமைக்க வேண்டும் என முறையிட்டனர். ஒரு வாரத்தில் உரியநடவடிக்ைக எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். ஆனாலும் தொடர்ந்து குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த பேரூராட்சி 2-வது வார்டு மக்கள் கவுன்சிலர் ஞானஜோதி கிறிஸ்துமஸ் தலைமையில் ஒன்றிய ச.ம.க. செயலர் ஜான்ராஜா மற்றும் பலர் சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால் அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் முறையாக பதில் கூறவில்லை என கூறப்படுகிறது.

சாலைமறியலுக்கு முயற்சி

இதனால் ஆத்திரமடைந்த வார்டு மக்கள் கவுன்சிலர் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன்புள்ள இட்டமொழி சாலையில் மறியல் போராட்டத்துக்கு முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, செயல் அலுவலர் உஷா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை அந்த தெரு மக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


Next Story