பெட்ரோல் கேனுடன் பொதுமக்கள் சாலை மறியல்


பெட்ரோல் கேனுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

ஆரணி அருகே பெட்ரோல் கேனுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தில் ஏரிக்கரை அருகாமையில் நீர்நிலை பகுதியில் சோலார் மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பு இடத்தில் இருந்து மோட்டூர் தச்சூர் கூட்ரோடு வரை சாலையோரமாக உயர் மின்னழுத்த மின்கம்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பெட்ரோல் கேனுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மின்கம்பம் அமைக்கும் பணிகளை அகற்றினர்.

அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story