பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

திருவண்ணாமலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பே கோபுரம் எதிரே சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கால்வாய் ஒட்டி செல்லும் 5-வது தெருவில் சாலை அமைக்க தனிநபர் ஒருவர் இடையூறு செய்வதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் பாதிப்படைவதாக கூறி அந்த தெருவில் வசிக்கும் சில குடும்பத்தினர் இன்று பே கோபுரம் முன்பு உள்ள சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story