பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

ஆரணி அருகே பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாம்பு தீண்டியது

ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் 100 நாள் வேலை திட்டத்தின்படி பணிதள பொறுப்பாளர் சரளா மேற்பார்வையில் ஊராட்சி மன்ற தலைவர் பழனி முன்னிலையில் 120 பேருக்கு வேலை வழங்கப்பட்டது.

அவர்கள் அனைவரும் இன்று பெரிய ஏரியின் வழியாக பாசன கால்வாய் செல்லும் பாதையை சீரமைப்புக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தனலட்சுமி (வயது 55) என்பவரை பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது, உடனடியாக அவரை தச்சூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சாலை மறியல்

இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அரையாளம் கிராமத்தில் உள்ள ஆரணி - தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் திடீரென சாைல மறியலில் ஈடுபட்டனர்

அப்போது தற்போது மழை பெய்து வரும் காரணத்தினால் ஏரி கால்வாய் பகுதிகளில் அதிகளவில் பாம்பு நடமாட்டம் உள்ளது. இந்த பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களை வேலை செய்ய உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் பழனி, துணைத்தலைவர் புவனேஸ்வரி பிரபாகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனால் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் இடத்தில் ஊராட்சி சார்பில் அவசர மருத்துவ கிட் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் ஏன் வைத்திருக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.


Next Story