சி.ஐ.டி.யு. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆலங்குடி பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க துணை தலைவர் மெய்யராம் தலைமை தாங்கினார். சங்க துணை பொருளாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஆர்ப்பாட்டம் குறித்து சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி தீர்க்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு 80 மாத டி.ஏ. உடனடியாக வழங்கிட வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி பண பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும். போக்குவரத்து கழகத்தில் உள்ள வரவு, செலவு வித்தியாசத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். கழகங்களில் உள்ள காலாவதியான பஸ்களை நீக்கிவிட்டு புதிய பஸ்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் தையல் சங்க தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாண்டியன் நன்றி கூறினார்.