தூத்துக்குடி அருகே சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி அருகே சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் தொழிலாளர் நல அலுவலகம் முன்பு மாவட்ட சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரசல் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் பதிவு, புதுப்பித்தல், பணப்பலன் பெறுதல் குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும், விண்ணப்பித்த நாளில் இருந்து ஓய்வூதியம் ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், கட்டுமானம், ஓட்டுனர் நல வாரியம் போல் இதர வாரியங்களுக்கு பணப்பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும், உப்பு தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாவட்ட பொருளாளர் அப்பாதுரை, சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பொன்ராஜ், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன், தையல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவிதாகூர், உப்பு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சங்கரன், பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் வையனபெருமாள், மீனவர் சங்க மாவட்ட செயலாளர் லெனஸ், மருத்துவர் மற்றும் முடிதிருத்தும் சங்கம் சார்பில் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.