சி.ஐ.டி.யூ. சார்பில் தியாகிகள் ஜோதி பயணம்


சி.ஐ.டி.யூ. சார்பில் தியாகிகள் ஜோதி பயணம்
x

சி.ஐ.டி.யூ. சார்பில் தியாகிகள் ஜோதி பயணம் புறப்பட்டது.

திருச்சி

சி.ஐ.டி.யூ சார்பில் அடுத்த மாதம் 4, 5, 6-ந்தேதிகளில் 15-வது தமிழ் மாநில மாநாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தியாகிகள் ஜோதி பயணம் தொடங்கி உள்ளனர். இதில் நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா ஆர்ச் முன்பு தியாகிகள் ஜோதி பயணம் தொடங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஜோதியை ஏந்தி வழிநடத்தினார். சுதந்திர போராட்ட வீரரும், சி.ஐ.டி.யூ.வின் தமிழக முதல் பொதுச்செயலாளருமான உமாநாத் நினைவாக இந்த தியாகிகள் ஜோதி பயணம் தொடங்கினர். இந்த பயணம் நேற்று அண்ணாசிலை, காந்தி மார்க்கெட், தென்னூர் இ.பி., உறையூர் குறத்தெரு, மத்திய பஸ் நிலையம், திருவெறும்பூர் வழியாக சென்றது. இன்று (சனிக்கிழமை) புதுக்கோட்டை மாவட்டம் சென்று அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டம் சென்றடையும். இதில் திருச்சி மாநகர் தலைவர் சீனிவாசன், பொருளாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story