சி.ஐ.டி.யு. சார்பில் ஊர்வலம்
வேலூரில் சி.ஐ.டி.யு. சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யு.) ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மாநாடு வேலூர் விருப்பாட்சிபுரத்தில் தொடங்கியது. இதை முன்னிட்டு ஊர்வலம் நடந்தது. ஊர்வலலத்தை சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கோபிகுமார், முன்னாள் மாவட்ட செயலாளர் தயாநிதி, மாவட்ட செயலாளர் பரசுராமன் உள்பட நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.
பேரணி சங்கரன்பாளையத்தில் இருந்து தொடங்கி விருப்பாட்சிபுரத்தில் முடிவடைந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சென்றனர்.
இதையடுத்து நடந்த மாநாட்டில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொது செயலாளர் எஸ்.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் பாரம்பரிய தொழிலான பீடி, டேனரி, தீப்பெட்டி, கைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும். பீடி மீது 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.