சி.ஐ.டி.யு.வினர் உறுதிமொழி ஏற்பு
தூத்துக்குடியில் சி.ஐ.டி.யு.வினர் உறுதிமொழி ஏற்றனர்.
தூத்துக்குடி
உலக தொழிற்சங்க சம்மேளனம் முடிவுப்படி செப்டம்பர் 1-ந் தேதி உலக அமைதிக்கான நடவடிக்கை தினமாக அறிவித்து உள்ளது. உலக அமைதியை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு. சார்பில் தூத்துக்குடி பூபாலராயர்புரத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
சி.ஐ.டி.யு மாவட்ட துணைச் செயலாளர் சங்கரன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ரசல், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட நிர்வாகிகள் முனியசாமி, காசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புறநகர் செயலாளர் ராஜா, சி.ஐ.டி.யு. மாவட்ட குழு நம்பிராஜன், தாமோதரன், கட்டுமான சங்கத்தின் நிர்வாகி பெருமாள், கிறிஸ்டோபர், பொன்னு உள்பட பலர் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.
Related Tags :
Next Story