அம்மா உணவகத்தில் நகரசபை தலைவர் ஆய்வு
சீர்காழி அம்மா உணவகத்தில் நகரசபை தலைவர் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட இருந்த உணவினை ருசித்து பார்த்துடன்,அங்கு பணிபுரியும் பணியாளரிடம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவினை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வழங்க கேட்டுக் கொண்டார். ேமலும் அம்மா உணவக வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தினார்.குறித்த நேரத்தில் பணிக்கு வராத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் வாசுதேவன் மற்றும் பலர் உடன் இருந்தனர். முன்னதாக புதிய பஸ் நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் நேரில் வழங்கினர்.
Related Tags :
Next Story