அன்பின்நகரம் கிறிஸ்துநாதர் ஆலய பிரதிஷ்டை விழா


அன்பின்நகரம் கிறிஸ்துநாதர் ஆலய பிரதிஷ்டை விழா
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அன்பின்நகரம் கிறிஸ்துநாதர் ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள அன்பின்நகரம் கிறிஸ்துநாதர் ஆலய பிரதிஷ்டை விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலையில் ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் பரிசுத்த திருவிருந்து ஆராதனையில் திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன் தேவசெய்தி வழங்கினார். பின்னர் நடந்த பாலர் மனமகிழ்ச்சி பண்டிகை, வாலிபர் பண்டிகையில். திருமண்டல குழந்தைகள் மிஷினரி இயக்குநர் எமல்சிங், திருமண்டல இளைஞர் மிஷினரி இயக்குநர் ஜோசப் ஜேசன் தர்மராஜ் பங்கேற்றனர். பின்னர் பரி ஞானஸ்நான ஆராதனை, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. புதுபிக்கப்பட்ட ரேனியல் ஹாலை திருமண்டல உப தலைவர், குருத்துவ செயலர் இம்மானுவேல், செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், தொடக்க, நடுநிலைப்பள்ளி மேலாளர் ஜேஸபர் அற்புதராஜ், உயர்நிலை, மேல்நிலை பள்ளி மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இரண்டாம் நாள் அதிகாலை அசன ஆயத்த ஆராதனை, மாலை 4மணிக்கு அசன விருந்து இரவு 9மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சேகர தலைவர் மணிராஜ், சேகர குரு ஜெபராஜா, சபை ஊழியர் அமிர்தராஜ் ராபர்ட் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story