3 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்


3 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே லாரியில் இருந்து ஜல்லி சிதறியதால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 3 லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் அருகே லாரியில் இருந்து ஜல்லி சிதறியதால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 3 லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லி ஏற்றி வந்த லாரி

குலசேகரம் அருகே வலியாற்றுமுகம் பகுதியில் இருந்து ஒரு டாரஸ் லாரி ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு குலசேகரம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அப்போது லாரியின் பின்பக்கம் உள்ள ஓட்டை வழியாக ஜல்லிக்கற்கள் சாலையில் விழுந்து கொண்டே இருந்தது. இதனால் லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் கீழே விழுந்தனர். இதையடுத்து லாரியை சிலர் துரத்தி வந்தனர். அப்போது மாமூடு சந்திப்பு அருகே வைத்து லாரியை துரத்தி வந்தவர்களும், அப்பகுதி பொதுமக்களும் சேர்ந்து அந்த லாரியை தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர்.

பறிமுதல்

மேலும் அந்த லாரியின் பின்னால் வந்த 2 லாரிகளையும் மடக்கினர். இதனால் அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே பொதுமக்களுக்கு ஆதரவாக பொன்மனை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கிருஷ்ணகுமார், செல்வன் ஆகியோரும் வந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து குலசேகரம் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.


Next Story