மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை சிறைபிடித்த பொதுமக்கள் இந்து முறைப்படி விபூதி பூசி, பொட்டு வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை சிறைபிடித்த பொதுமக்கள் இந்து முறைப்படி விபூதி பூசி, பொட்டு வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
x

பள்ளிகொண்டா அருகே மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் சிறை பிடித்து அவர்களுக்கு விபூதி பூசி, பொட்டுவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்


பள்ளிகொண்டா அருகே மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் சிறை பிடித்து அவர்களுக்கு விபூதி பூசி, பொட்டுவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மத பிரசாரம்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த சின்னசேரி ஊராட்சியில் இந்துக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பகல் 12 மணிக்கு சுமார் 15 பேர் கும்பல் சின்னசேரி கிராமத்திற்கு வந்தனர். அவர்கள் சின்னசேரி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து கடவுளை சென்றடையும் வழி என்பது குறித்து புத்தகத்தையும், மதமாற்றம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கி வந்தனர்‌.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு மதமாற்றம் செய்ய வந்த கும்பலை மடக்கி சிறை பிடித்தனர். பின்னர் இது குறித்து பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை. அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தனர்.

பேச்சுவார்த்தை

அதன்பேரில் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, வேலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சிறைபிடித்து வைத்திருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அப்பகுதி இளைஞர்கள் இதற்கு முன்பு மூன்று முறை இந்த குழுவினர் எங்கள் பகுதிக்கு வந்து மத மாற்றத்தில் ஈடுபடும்படி வலியுறுத்தி வந்தனர். நாங்கள் இல்லாத நேரத்தில் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி நன்றாக படிப்பதற்கும், உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் கூறி வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

விபூதி பூசி, பொட்டு வைத்தனர்

இதனையடுத்து குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்பேரில் சிறைபிடித்தவர்களை கிராமமக்கள் விடுவித்தனர்.

முன்னதாக மதமாற்றத்தில் ஈடுபட்ட 15 பேருக்கும் அந்தப் பகுதி இளைஞர்கள் இந்து முறைப்படி விபூதி பூசி, பொட்டு வைத்தனர். அவர்கள் வந்த வாகனத்திற்கும் இந்து முறைப்படி பூஜை செய்து, பொட்டு வைத்தனர்‌. இதனால் அந்த பகுதியில் சுமார் நான்கு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story