சேலம் அரசு சட்ட கல்லூரி அணி வெற்றி


சேலம் அரசு சட்ட கல்லூரி அணி வெற்றி
x

ஆங்கில மாதிரி நீதிமன்ற போட்டியில் சேலம் அரசு சட்ட கல்லூரி அணி வெற்றி பெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு பரிசு வழங்கினார்

திருநெல்வேலி

நெல்லை:

சென்னை சட்டக்கல்வி இயக்ககம் சார்பில் நெல்லை அரசு சட்டக் கல்லூரியில் மாநில அளவிலான 'ஆங்கில மாதிரி நீதிமன்ற போட்டி' 3 நாட்கள் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு சட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவர் குழுவினர் கலந்து கொண்டனர். இதில் சேலம் அரசு சட்ட கல்லூரி முதல் இடத்தையும், சென்னை புதுப்பாக்கம் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி 2-வது இடத்தையும் பிடித்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, மாஜிஸ்திரேட் திரிவேணி, நெல்லை அரசு சட்ட கல்லூரி முதல்வர் லதா ஆகியோர் முன்னிலை வைத்தனர். பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், சண்முகப்பிரியா, கிரேனா ரஞ்சிதம், லட்சுமி விஸ்வநாத் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன இயக்குனர் மகாராஜன் மற்றும் பேராசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ஜீவரத்தினம் நன்றி கூறினார்.


Next Story