மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடம்; அரசுப்பள்ளி மாணவிக்கு பாராட்டு
மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்
பட்டிவீரன்பட்டி அருகே செங்கட்டாம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி சிவஹரிதா. இவர் 8-ம் வகுப்பு வரையிலான மாநில கலை திருவிழா போட்டியில் பங்கேற்றார். அப்போது மாணவி சிவஹரிதா பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
இதையடுத்து பள்ளிக்கு திரும்பிய மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடம் பிடித்த சிவஹரிதாவுக்கு, முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மாவட்ட கல்வி அலுவலர்கள் வளர்மதி, பாண்டித்துரை, வட்டார கல்வி அலுவலர்கள் ஜான் பீட்டர், அமரநாதன், தமிழ்ச்செல்வி, ஊராட்சி தலைவர் கோபி கிருஷ்ணன், தலைமை ஆசிரியர் சுகுமாரி, ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story