கிராம சபை கூட்டத்தில் கைகலப்பு-ஊராட்சி தலைவியின் கணவர் மருத்துவமனையில் அனுமதி
செங்கம் அருகே கிராம சபை கூட்டத்தில் நடந்த கைகலப்பில் ஊராட்சி தலைவியின் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செங்கம்
செங்கம் அருகே கிராம சபை கூட்டத்தில் நடந்த கைகலப்பில் ஊராட்சி தலைவியின் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கிராமசபை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள சென்னசமுத்திரம் ஊராட்சியில் நேற்று மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவி திவ்யா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
அப்போது அங்கு வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோபி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவி திவ்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து ஊராட்சி தலைவியின் கணவர் கோபி அங்கு வந்து இது குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.
மருத்துவமனையில் அனுமதி
இதில் ஊராட்சி மன்ற தலைவி திவ்யாவின் கணவர் கோபிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்தம் சொட்ட சொட்ட செங்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.