10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை


10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை
x

பண்ருட்டி அருகே விஷம் குடித்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் சசி (வயது 15). அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சசி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், சசியை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சசி பரிதாபமாக இறந்தார். இதைபார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

சோகம்

இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்ததால் மனமுடைந்து சசி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story