10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை


10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை
x

10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டிய 2 டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியபட்டி சீலாநகரை சேர்ந்த சின்னத்துரை மகன் பிரகாஷ் (வயது 20). மேலத்தெருவை சேர்ந்த அம்மாசியின் மகன் பரத் (21). டிரைவர்களான இவர்கள் இருவரும், பஞ்சப்பூர் அருகே உள்ள ஒரு பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர். அப்போது, அந்த பெண்ணின் வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும், 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை அந்த பெண்ணின் வீட்டுக்கு கடத்தி வந்து, பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், அதை வீடியோ எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோவை தங்கள் நண்பர்கள் சிலருக்கும் அனுப்பியதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பிரகாஷ், பரத் ஆகிய 2 பேர் மீதும் பெண்ணை பலாத்காரமாக கடத்தி செல்லுதல், போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story