தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு-வருகிற 8-ந் தேதி முதல் நடக்கிறது


தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு-வருகிற 8-ந் தேதி முதல் நடக்கிறது
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எஸ்.எஸ்.சி., ஹவில்தார் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் இலவசமாக பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://bit.ly/3XRC17y என்ற இணைய பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த போட்டி தேர்வை எழுத தகுதி உள்ளவர்கள், இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story