9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை


9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
x

மதுரையில் 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

மதுரை


மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் வழிவிட்டான். இவருடைய மகள் மீனாட்சி (வயது 14). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். மீனாட்சிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்றும் அவரை பெற்றோர் படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மனவருத்தம் அடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் வசிப்பவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்டனர். பின்னர் மாணவியை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் மீனாட்சி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story