முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்


முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்
x

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நேற்று தொடங்கியது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நேற்று தொடங்கியது.

1,089 இடங்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை, முதுகலையில் 18 பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முதல் இளங்கலை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு, முதுகலை 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. 1,089 இடங்களுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். இதையடுத்து மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தரவரிசை பட்டியலின் படி நடைபெற்றது. தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. முதல் கட்ட கலந்தாய்வில் 789 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

மாணவர்களுக்கு வரவேற்பு

மீதமுள்ள இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் நேரடியாக விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும்.இந்தநிலையில் நேற்று ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அப்போது மாணவ- மாணவிகளை பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் வரவேற்றனர். மேலும் கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி கலந்துகொண்டு, முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எபிநேசர், வன விலங்குகள் உயிரியல் துறை உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நேற்று முதல் நாள் என்பதால் பாடங்கள் நடத்தப்பட வில்லை. வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கல்லூரி பேராசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.


Next Story