அலங்காநல்லூர் அருகே சிறுவர்கள் நடத்திய களிமண் காளை ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் அருகே சிறுவர்கள் நடத்திய களிமண்ணால் காளை செய்து ஜல்லிக்கட்டு நடத்தினர்
அலங்காநல்லூர்
உலகப் புகழ் பெற்றது அலங்காநல்லூர், பாலமேடு, ஜல்லிக்கட்டு விழாவாகும். இந்நிலையில் அலங்காநல்லூர் அருகே குறவன் குளம் கிராமத்தை சேர்ந்த பள்ளிக்கூட சிறுவர்கள் ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த மைதானத்தில் களிமண்ணால் ஆன பொம்மை காளைகளை தயார் செய்து, அதற்கு வர்ணம் தீட்டி வைத்தனர். பின்னர் ஜல்லிக்கட்டு மாதிரி வாடிவாசல் வடிவமைத்தனர். காளைகள் வரிசையாக நிறுத்தி வாடிவாசல் வருவது போல் ஏற்பாடு செய்தனர். நிஜ ஜல்லிக்கட்டுக்கு என்ன நடைமுறை விதியோ அதே போல மாதிரி ஜல்லிக்கட்டு வாடிவாசலை வடிவமைத்து இருந்தனர். இந்த மாணவர்கள் குழுவினர் 15-க்கும் மேற்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மை காளைகளை வரிசையாக கொண்டு வந்தனர். அந்த காளைகளுக்கு பெயர் வைத்து அழைத்தனர். அந்த காளைகளை பிடிப்பவர்களுக்கான பரிசுகளை அறிவித்து பொம்மை காளைகளை வைத்து மாதிரி ஜல்லிக்கட்டு நடத்தி எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்துள்ளனர்.
இந்த காட்சிகள் வைரலாகி அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.