துப்புரவு பணியாளர் படுகாயம்


துப்புரவு பணியாளர் படுகாயம்
x

குப்பையில் இருந்த மருந்து தீப்பிடித்ததால் துப்புரவு பணியாளர் படுகாயம் அடைந்தார்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள கங்காரக்கோட்டை ஊராட்சி கீழ மேட்டூரை சேர்ந்தவர் முத்து முனியம்மாள் (வயது 38). தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் அன்பின் நகரம் சமுதாயக்கூடம் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகளை அகற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அதில் இருந்த கரி மருந்துகள் தீப்பிடித்ததில் முத்து முனியம்மாள் மீது தீ பரவியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து முத்து முனியம்மாளின் கணவர் மூக்காண்டி கொடுத்த புகாரின் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ராஹிம் வழக்குப்பதிவு செய்து குப்பைத்தொட்டியில் கரி மருந்துகளை போட்டவர் யார் என விசாரணை நடத்தி வருகிறார்.

குப்பையில் இருந்த மருந்து தீப்பிடித்ததால் துப்புரவு பணியாளர் படுகாயம் அடைந்தார்.


Next Story