நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணி


நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணி
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பேரூராட்சியில் நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி பேரூராட்சி சார்பில், தூய்மையான மக்கள் இயக்கத்தின் கீழ் நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்கு கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமை தாங்கினார். கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான தடுப்பணை பகுதியில் இருந்த பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டு, புதர் செடிகளும் வெட்டி அகற்றப்பட்டன. இதில் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் அதே பகுதியில் வீணாகும் கட்டுமான பொருட்களை பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டுபவர்களுக்கு ரூ,1,000 அபராதம் விதிக்கப்படும் என்ற வாசகங்கள் அடங்கிய எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்க, முக்கிய சாலைகளின் தடுப்புச்சுவர்களில் சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணியும் நடைபெற்றது.


Next Story