தூய்மை பணி


தூய்மை பணி
x

திட்டச்சேரி பேரூராட்சியில் தூய்மை பணி நடைபெற்றது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திட்டச்சேரி பேரூராட்சி சார்பில் ஒட்டுமொத்த தூய்மை பணி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா தலைமை தாங்கினார்.பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். புதுமனைத்தெருவில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி நடைபெற்றது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story