பாப்பாரப்பட்டி சின்ன ஏரியில் தூய்மை பணி


பாப்பாரப்பட்டி சின்ன ஏரியில் தூய்மை பணி
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சின்ன ஏரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடந்தது. மாவட்ட நிர்வாகம், நேரு இளைஞர் மையம், பென்னாகரம் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை சார்பில் நடந்த இந்த தூய்மை பணியை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சின்ன ஏரியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா, துணைத்தலைவர் மல்லிகா ராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, நேரு இளைஞர் மைய திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story