பென்னிகுவிக் மணிமண்டபத்தை சுத்தம் செய்த விவசாயிகள்


பென்னிகுவிக் மணிமண்டபத்தை சுத்தம் செய்த விவசாயிகள்
x
தினத்தந்தி 8 Jan 2023 10:43 PM IST (Updated: 8 Jan 2023 11:04 PM IST)
t-max-icont-min-icon

லோயர்கேம்பில் உள்ள பென்னகுவிக் மணிமண்டபத்தை விவசாயிகள் சுத்தம் செய்தனர்.

தேனி

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. முல்லைப்பெரியாறு அணையை ஆங்கிலேயர் காலத்தில் இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் கட்டினார். இதனால் அவரது நினைவை போற்றும் வகையில் அவருக்கு தமிழக அரசு சார்பில் கூடலூர் அருகே லோயர்கேம்பில் கடந்த 2013-ம் ஆண்டு நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டது. அன்று முதல் இந்த மணிமண்டபத்தை தேனி மாவட்ட மக்கள், மட்டுமின்றி பிற மாவட்ட மக்களும், வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை அன்று ஜான் பென்னிகுவிக்கின் பிறந்தநாள் வருகிறது. இதனால் தேனி மாவட்ட மக்கள், அவரது பிறந்தநாளை பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு முதல் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் வருகிற 15-ந்தேதி அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழக பொதுப்பணித்துறை சார்பில் லோயர்கேம்பில் உள்ள மணிமண்டப வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அங்கு வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் புற்கள் வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பெரியாறு-வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தலைமையில் இன்று மணிமண்டப வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் சலேத்து, பொருளாளர் பொன்.காட்சிக்கண்ணன் உள்பட விவசாய சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பென்னிகுவிக் மணிமண்டபம் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் வெளிப்பகுதியில் சாலையோரம் வளர்ந்திருந்த செடி, கொடிகளை வெட்டி அகற்றினர்.


Related Tags :
Next Story