தூய்மை பணி


தூய்மை பணி
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு ஊராட்சியில் தூய்மை பணி நடந்தது

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட, பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ள கீழ வீதியில் பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த நிழலகத்தில் சுவரொட்டிகள், பதாகைகள் அடிக்கடி ஒட்டப்படுகிறது. இதனால் பயணிகள் நிழலகம் அலங்கோலமாக காட்சியளித்தது. மேலும் பஸ்சுக்காக காத்திருக்கும் பக்தர்கள்,பயணிகள் முகம் சுளிக்கும் நிலையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் ஏற்பாட்டின் படி கீழவீதி பயணிகள் நிழலகத்தில் ஊராட்சி பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பயணிகள் நிழலகத்தில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என அறிவிப்புகளையும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வசதியும் செய்யப்பட்டது. இதேபோல் அரசு ஆஸ்பத்திரி, சரபோஜி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயணிகள் நிழலகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.


Next Story