தூய்மை பணி


தூய்மை பணி
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி நகர் பகுதியில் தூய்மை பணி நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் 2.0 சார்பில் தூய்மைப்படுத்தும் பணி சீர்காழி நகராட்சி முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி பூங்காவில் நகராட்சி சார்பாக நடைபாதைகள் தூய்மை செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதனை சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன், சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பூங்கா வளாகம் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story