நாகூர் சில்லடி கடற்கரையில் தூய்மை பணி
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாகூர் சில்லடி கடற்கரையில் தூய்மை பணி நடந்தது.
நாகப்பட்டினம்
நாகூர்:
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாகை வனசரகம், நகராட்சி மற்றும் தேசிய பசுமைப்படை சார்பில் நாகூர் சில்லடி கடற்கரையில் தூய்மை பணி நடந்தது.நிகழ்ச்சிக்கு நாகை நகர்மன்ற துணை தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர், முத்தமிழ் ஆனந்தன் முன்னிலை வகித்தார். நாகூர் தர்கா ஆலோசனைக்குழு தலைவர், செய்யது முகமது கலீபா சாஹிப், நகராட்சி தூய்மை பணி ஆய்வாளர் சேகர், தேசிய பசுமைப்படை, தகவல் மைய நல்லாசிரியர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நாகை மாவட்ட வனசரகர் ஆதிலிங்கம், வனக்காவலர்கள்,தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story