ெரயில் நிலையத்தில் தூய்மை பணி
பாபநாசம் ரெயில் நிலையத்தில் தூய்மை பணி நடந்தது.
பாபநாசம்:
பாபநாசம் ெரயில் நிலைய வளாகத்தில் பாபநாசம் ெரயில் பயணிகள் சங்கம் மற்றும் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படையினர் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன் தொடங்கி வைத்தார்.இதில் ெரயில் நிலைய நடைமேடை பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி, தூய்மை செய்தனர். மேலும் ெரயில் தண்டவாள பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அள்ளியும், வளர்ந்திருந்த செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர். தஞ்சை சரக ெரயில்வே வணிக ஆய்வாளர் ராம்குமார்,ெரயில்வே முதுநிலை பொறியாளர் (பணிகள்) பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பணிகளை உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், பட்டதாரி ஆசிரியர் சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் ெரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன் செய்திருந்தார்.