கோவில்களில் தூய்மை பணி
கோவில்களில் தூய்மை பணி நடந்தது.
நன்னிலம் அருகே உள்ள திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவி்லில் அடுத்த மாதம் குடமுழுக்கு நடைபெற உள்ளதையொட்டி திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவில் பிரகாரத்தில் தூய்மை பணிகள் நடந்தன. திருவண்ணாமலை கபாலீஸ்வரர் உழவாரப்பணி குழுவினர் மற்றும் சேலத்தை சேர்ந்த சிவ தொண்டர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இதேபோல் குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் தூய்மை பணி நடந்தது. அப்போது கோவிலின் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் வளர்ந்திருந்த புதர்கள் அகற்றப்பட்டன. சாமி சிலைகள் சுத்தம் செய்யப்பட்டன. அபிஷேக நீர் வெளியேறும் பாதையும் சுத்தம் செய்யப்பட்டது. சிவனடியார்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.