வேதாரண்யம் கடற்கரையில் தூய்மை பணி


வேதாரண்யம் கடற்கரையில் தூய்மை பணி
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் கடற்கரையில் தூய்மை பணி நடந்தது

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் கடற்கரையில் உலக கடற்கரை தூய்மை தினத்தையொட்டி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் நகராட்சி சார்பில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் வேதாரண்யம் கடலோர காவல் குழும துைண போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ், ராஜசேகரன், அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் குப்பையில்லா நகரத்தை உருவாக்குவோம் என மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கடற்கரையில் கல்லூரி- பள்ளி மாணவர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், கடலோர காவல்படை போலீசார் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை அகற்றினர்.


Next Story