கந்திலி ஊராட்சியில் பள்ளிகளில் தூய்மை பணி
கந்திலி ஊராட்சியில் பள்ளிகளில் தூய்தைப்படுத்தும் பணி நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக பள்ளிகள் மற்றும் சமையல் கூடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருப்பத்தூர் அருகே கந்திலி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் சின்னூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.
இப்பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் பி.பிரபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஊராட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story