தாமிரபரணி ஆற்றில் தூய்மைப்பணி
பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் தூய்மைப்பணி நடந்தது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்ட நிர்வாகம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் ஆகியவை இணைந்து தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் பணி மற்றும் நதியில் புதைந்துள்ள துணிகளை அகற்றும் பணியை நேற்று மேற்கொண்டன. பாபநாசம் ஆனந்த விலாஸ் மருதமரம் பகுதியில் இந்த பணி நடைபெற்றது.
இப்பணியை கிராம உதயம் ஆலோசனைக்குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் தொடங்கி வைத்தார். கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், உறுப்பினர்கள், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர். இதில் 2 டன் துணி கழிவுகள் ஆற்றில் இருந்து அகற்றப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் மூர்த்தி, கிராம உதயம் தனி அலுவலர் ரேவதிகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story