ஆதிபராசக்தி ஆன்மிக தொண்டு இயக்கம் சார்பில் துப்புரவு பணி


ஆதிபராசக்தி ஆன்மிக தொண்டு இயக்கம் சார்பில் துப்புரவு பணி
x

ஆதிபராசக்தி ஆன்மிக தொண்டு இயக்கம் சார்பில் துப்புரவு பணி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் தலைவர் கோ.ப.அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு கலவை அரசு மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செடி, கொடிகள், குப்பைகளை அகற்றி துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. செவ்வாடை தொண்டர்கள் 250-க்கும் மேற்பட்டவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் செடி, கொடிகளை அகற்றினார்கள்.

ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரி முதல்வர் முகமது சாதிக் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் டாக்டர் பிரதீஸ்வரன் முன்னிலை வகித்தார். வருகிற 25-ந் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் தலைவர் கோ.ப.அன்பழகன் பிறந்தநாள் நல திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. அதை முன்னிட்டு கலவையை சுற்றியுள்ள கிராமங்களில் ஆன்மிக தொண்டு இயக்கத்தின் சார்பில் செவ்வாடை தொண்டர்களுக்கும் நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளது. கலவை அரசு மருத்துவ அலுவலர் சதீஷ், அரிமா சங்கம் மணி மற்றும் ஆதிபராசக்தி கல்லூரி ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Next Story