தூய்மை பணியாளர் தற்கொலை


தூய்மை பணியாளர் தற்கொலை
x

வடமதுரை அருகே தூக்குப்போட்டு தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள பெரியகோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 35). கட்டுமான தொழிலாளி. அவருடைய மனைவி பாண்டியம்மாள் (33). மாற்றுத்திறனாளியான இவர், தாமரைப்பாடி ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக பாண்டியம்மாள் தலைவலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார். இருப்பினும் தலைவலி குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மனம் உடைந்த பாண்டியம்மாள், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பாண்டியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story