தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை


தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை
x

தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

தலைவாசல்:

தலைவாசல் அருகே திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் சரசு. இவர் திட்டச்சேரி ஊராட்சி முன்னாள் தலைவராக இருந்தார். இவருடைய கணவர் பாலன் (வயது 57). இதே ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது பாலன் விஷம் குடித்து விட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story