தூய்மை இந்தியா திட்ட பணி


தூய்மை இந்தியா திட்ட பணி
x

சீர்காழியில் தூய்மை இந்தியா திட்ட பணியை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி தென்பாதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது. சீர்காழி நகா் மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தலைமை தாங்கினார். ஆணையர் (பொறுப்பு) ராஜகோபால், நகர ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை வரவேற்று பேசினார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்து நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்வோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அனைத்துக் கடைகளிலும் பாலித்தீன் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story