தூய்மைபணி
நாகை புதிய கடற்கரையில் நடந்த தூய்மை பணியை நகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்.
நாகை புதிய கடற்கரையில் நடந்த தூய்மை பணியை நகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்.
சர்வதேச கடலோர தூய்மை தினம்
நாகை புதிய கடற்கரையில் சர்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கடல் சார்ந்த அறிவியல் துறையும், தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையமும் இணைந்து தூய்மை பணியை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு கடல்சார் அறிவியல் துறையில் இணை பேராசிரியர்கள் ராஜாராம், மனோகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். நகராட்சி ஆணையர் திருமால் செல்வம், தூய்மை பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை மற்றும் அதனை செயல்படுத்துதல் முறைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
தொடர்ந்து மாணவ-மாணவிகள் நகை புதிய கடற்கரையில் தூய்மை பணி செய்து 180 கிலோ மக்கு மற்றும் மக்காத குப்பைகளை சேகரித்தனர்.
இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை சுத்தமான கடல், பாதுகாப்பான கடல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் நாகை ஏ.டி.எம். மகளிர் கல்லூரி மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.