கோவில்பட்டியில் மாணவர்களுக்கு தூய்மை விழிப்புணர்வு போட்டி


கோவில்பட்டியில்  மாணவர்களுக்கு தூய்மை விழிப்புணர்வு போட்டி
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மாணவர்களுக்கு தூய்மை விழிப்புணர்வு போட்டி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காந்திநகர், புது ரோடு, பாரதி நகர் நகரசபை பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தூய்மைக்கான விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகரசபை தலைவர் கா. கருணாநிதி மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் நகரசபை ஆணையாளர் ராஜாராம், பொறியாளர் ரமேஷ், சுகாதார அதிகாரி நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் வள்ளிராஜ், முருகன், காஜா மைதீன் மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story