தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி
தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி
சாத்தூர்
சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி தலைமையில், நகராட்சி ஆணையாளர் இளவரசன், சுகாதார அலுவலர் வெங்கடேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி, சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் சுற்றுப்புற சுகாதாரத்தில் பங்களிக்கும் மகளிரை அங்கீகரிக்கும் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி தென்வடல் புது தெருவில் தொடங்கி முருகன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு வழியாக வெள்ளைக்கரை ரோட்டில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் வரை நடைபெற்றது. பேரணியின் போது தூய்மை உறுதி மொழியுடன் ஆரம்பிக்கப்பட்டு ஒலிபெருக்கி, விழிப்புணர்வு பதாகை, கரகோசங்கள் மூலம் பொது மக்களுக்கு சுற்றுப்புறம், சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியில் நகரமன்ற கவுன்சிலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், மத்தூர் மஸ்தூர் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.