அரசு பள்ளியில் தூய்மை திருவிழா
வந்தவாசியில் அரசு பள்ளியில் தூய்மை திருவிழா நடந்தது
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசி பெரிய காலனியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி சார்பில் தூய்மை திருவிழா நடந்தது.
24-வது வார்டு கவுன்சிலர் அம்பிகா மேகநாதன் தலைமை தாங்கினார். தலைமைஆசிரியர் மோசஸ் முன்னிலை வகித்தார்.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், அலுவலர் பழனி, ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் மேகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப் பற்றியும், சுகாதாரம் குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் மக்கும் குப்பைகள், மங்காத குப்பைகள் பிரித்து பார்த்தல் செய்முறை விளக்கத்தை நகராட்சி ஆணையாளர் செய்து காட்டினார்.
முடிவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story