கோவில்களில் தூய்மை பணி


கோவில்களில் தூய்மை பணி
x
தினத்தந்தி 23 July 2023 12:45 AM IST (Updated: 23 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் தூய்மை பணிகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

கோவில்களில் தூய்மை பணிகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் ஆய்வு செய்தார்.

தூய்மைப்பணிகள்

இந்து சமய அறநிலையத்துறையின் நாகை மண்டல இணை ஆணையராக கடந்த மாதம் பொறுப்பேற்ற குமரேசன், மண்டலத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில், கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில், திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில், திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில், ராகு கேது பரிகார தலமான திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடைபெற்ற தூய்மை பணிகளை இணை ஆணையர் குமரேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

120 கோவில்களில்...

இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில், தியாகராஜ சாமி கோவில், மன்னார்குடி ராஜகோபால சாமி கோவில், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் என 2 மாவட்டங்களிலும் 120 கோவில்களில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. ஆய்வின்போது அனைத்து கோவில்களின் செயல் அலுவலர்களும் உடன் இருந்தனர்.


Next Story