தாமிரபரணி ஆற்றங்கரையில் தூய்மை பணி
நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் தூய்மை பணிகள் நடந்தது.
பேட்டை:
உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு, நெல்லை நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் நீர்வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள பாபா கோவில் மற்றும் ஜடாயு படித்துறை பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. பேரூராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, துணைத்தலைவர் பிச்சம்மாள், செயல் அலுவலர் விஜயகுமார் மற்றும் கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள், சாராள் தக்கர் மகளிர் கல்லூரி மாணவிகள் தூய்மை பணி மேற்கொண்டனர்.
* உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு, நெல்லை மாவட்ட நிர்வாகம், கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில், நெல்லை நீர்வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கோலப்போட்டி, சேரன்மாதேவி பக்வத்சல பெருமாள் கோவில் அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்தது. சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோலப்போட்டியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றங்கரையை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சேரன்மாதேவி பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன், கிராம உதயம் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன், ஆலோசனைக்குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங், நிர்வாக மேலாளர் மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* நெல்லை அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் யமுனா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் யதீஸ்வரி சரவணபவப்பிரியா அம்பா, கல்லூரியின் துணை முதல்வர் கலாவதி, ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை லலிதா, கணிதத்துறை உதவி பேராசிரியை ராமலட்சுமி மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.