சாலைக்காக வீடுகள், பயிர்கள் அகற்றம்


சாலைக்காக வீடுகள், பயிர்கள் அகற்றம்
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே சாலைக்காக வீடுகள், பயிர்கள் அகற்றப்பட்டன.

கடலூர்

புதுப்பேட்டை,

கடலூரில் இருந்து மடப்பட்டு வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோர நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பண்ருட்டி அருகே சித்திரைச்சாவடிக்கு போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்றனர். பின்னர் 3 பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, கொய்யா, நெல் போன்ற பயிர்களை அழித்தனர். மேலும் வீடுகளும் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, தனது வீட்டை இடித்ததை பார்த்து சேகர் என்ற விவசாயி தரையில் படுத்து உருண்டு கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி, காண்போரை கண்கலங்கச் செய்தது. இருப்பினும் தொடர்ந்து வீடு இடித்து அகற்றப்பட்டது.


Next Story