குன்னூரில் காலநிலை மாற்றம்:பச்சை தேயிலை மகசூல் பாதிப்பு-விவசாயிகள் கவலை
குன்னூரில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.
குன்னூர்
குன்னூரில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.குன்னூரில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.
மகசூல் பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயமே பிரதானமாக இருந்து வருகிறது. கம்பெனி தேயிலை எஸ்டேட்கள் மட்டுமின்றி சிறு விவசாயிகளும் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேயிலை பயிருக்கு மழையும் வெயிலும் சரிசமமாக இருந்தால் மகசூல் அதிக அளவு கிடைக்கும்.
ஆனால் தற்போது மாறி மாறி நிலவும் சீதோஷ்ண நிலையால் பச்சை தேயிலை மகசூல் பாதித்து வருகிறது.
ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் வரை நீலகிரி மாவட்டத்தில் உறை பனி காலமாக இருப்பதால் தேயிலை மகசூல் குறைவாகவே இருக்கும். கடந்த ஜனவரி மாதத்தில் கடும் பனி நிலவியது. தற்போது பகல் வேளையில் காற்றுடன் வெயிலும் இரவில் பனிபொழிவும் இருந்து வருகிறது.
கொழுந்தை பறிக்க வேண்டும்
இதனால் வறட்சி ஏற்பட்டு பச்சை தேயிலை மகசூல் குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள். இது குறித்து உபாதி தேயிலை ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் டாக்டர் உதயபானு கூறியதாவது:- தற்போது நிலவும் கால நிலையால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 -ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மழை கிடைத்ததால் ஒரு ஹெக்டேருக்கு 750 கிலோ மகசூல் கிடைத்ததது. ஆனால் இந்த ஆண்டு மழை குறைவினாலும் வறட்சி காரணமாகவும் 500 கிலோ முதல் 600 கிலோ வரை ஒரு ஹெக்டேருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேயிலை செடிகளில் வறட்சியை போக்க யூரியா 2 கிலோ, பொட்டாஷ் 2 கிலோ கலந்து 300 லிட்டர் தண்ணீரில் ஒரு ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும். மேலும் பச்சை தேயிலை பறிக்கும் போது தாய் இலை விட்டு கொழுந்தை பறிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.