நூற்றாண்டு பள்ளிக்கு மூடுவிழா - அறக்கட்டளை உருவாக்கி பள்ளியை மீட்ட முன்னாள் மாணவர்கள்


நூற்றாண்டு பள்ளிக்கு மூடுவிழா - அறக்கட்டளை உருவாக்கி பள்ளியை மீட்ட முன்னாள் மாணவர்கள்
x

உதகை அருகே மாணவர் சேர்க்கை குறைவால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட அரசு பள்ளியை முன்னாள் மாணவர்கள் மீட்டனர்.

நீலகிரி,

உதகை அருகே மாணவர் சேர்க்கை குறைவால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட அரசு பள்ளியை முன்னாள் மாணவர்கள் மீட்டனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே நஞ்சநாடு பகுதியில் 1922-ல் தொடங்கப்பட்ட அரசு தொடக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்ததால், கடந்த 2018-ல் பள்ளியை மூட தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

இதை அறிந்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து அறக்கட்டளை ஒன்றை துவங்கி, முதற்கட்டமாக தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படித்து வைத்து வருகின்றனர். சுமார் 20 லட்சம் ரூபாய் நிதி திரட்டி, பள்ளியை சீரமைத்து, பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியையும் கொண்டுவந்துள்ளனர். மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல புதிய வேன் ஒன்றையும் வாங்கியுள்ளனர்.

மேலும் 8 ஆசிரியர்கள், 1 உதவியாளர் என 9 பேரை நியமித்து சம்பளமும் வழங்கி வருகின்றனர். இதன் மூலம் 2018-ல், 17ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 170 ஆக அதிகரித்துள்ளது. மூடு விழாவிலிருந்து தங்களது பள்ளிக்கு மீண்டும் புத்துயிர் அளித்த முன்னாள் மாணவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


Next Story