தெலுங்கானா கொள்ளையன் சிறையில் அடைப்பு


தெலுங்கானா கொள்ளையன் சிறையில் அடைப்பு
x

3 நாட்கள் விசாரணையை தொடர்ந்து தெலுங்கானா கொள்ளையன் சிறையில் அடைக்கப்பட்டான்

தேனி

தேனி கே.ஆர்.ஆர். நகர் 3-வது தெருவை சேர்ந்த டாக்டர் பாப்புச்சாமி என்பவருடைய வீட்டில் கடந்த 14-ந்தேதி பூட்டை உடைத்து 16½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அவருடைய மனைவி ஜெயராணி கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அப்பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெலுங்கானா மாநிலம், வாரங்கால் பகுதியில் உள்ள கொரகொண்டா கீர்த்திநகரை சேர்ந்த தேவேந்தர் மகன் செட்டிமணி என்ற மணிமாறன் (39) என்பது தெரியவந்தது. மேலும், அவர் தேனியில் திருடிவிட்டு ஈரோடு பகுதியில் மற்றொரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டபோது போலீசார் அவரை கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தேனி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இறுதியில் நகைகளை விற்பனை செய்து செலவு செய்து விட்டதாக கூறியதாக தெரிகிறது. இதனால், அவரிடம் இருந்து 1½ பவுன் நகைகளை மட்டுமே போலீசாரால் கைப்பற்ற முடிந்தது. இதையடுத்து மணிமாறனை போலீசார் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.


Next Story