விக்கிரமசிங்கபுரத்தில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்


விக்கிரமசிங்கபுரத்தில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்
x

விக்கிரமசிங்கபுரத்தில் 2 டாஸ்மாக் கடைகள் திடீரென மூடப்பட்டது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் 4 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விக்கிரமசிங்கபுரம் அருகே கோடாரங்குளத்தில் உள்ள கடை எண்-10619 மற்றும் கோட்டைவிளைபட்டி அருகே உள்ள கடை எண்-10824 ஆகிய 2 டாஸ்மாக் கடைகள் கடந்த 2 நாட்களாக திடீரென மூடப்பட்டு உள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் மது வாங்க சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் கேட்டபோது, 'சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக அந்த கடைகள் மூடப்பட்டு உள்ளன. விரைவில் அவை திறக்கப்படும்' என்று தெரிவித்தனர்.



Next Story